ஒரு கோப்பைத் தேநீர்
தேநீர்
வெறும் மூலப்பொருள்கள் கலவையல்ல அதில்
குடும்பம் அரசியல்
ஆன்மீகம் விளையாட்டு
கதை கலகம் காதல் என சகலமும் கலந்திருக்கிறது
தேநீர்
இரு அரசாங்கங்களுக்கிடையே
வினையூக்கி துளிகளாகவும்
செயல்படுகிறது
தேநீர் வெறும் தேநீரல்ல
இப்போது இந்தக் கிறுக்கனின் கையிலும்
ஒரு கோப்பைத் தேநீர்..
.