பெண்மை..

மையிட்ட கண்ணாலே
மையல் கொள்ள வைத்தாலே
மைல்கள் தூரம் சென்றாலும்
மதம் பிடித்த யானையாக வருகிறேன்..

கருவிழி கண்ணாலே
காண்பவை எல்லாம் அடைந்தாலே
கார்மேகம் தோன்றி
கண்மணியை முழுவதும் நினைத்தேனடா..

பாவை பார்வை பட்டதும்
பரஞ்ஜோதி குளிர்ந்து போனது
படைத்தவனுக்கும் பக்கவாதம்
வந்தது அப்போதுதான் காண்கிறேன்..

மங்கை மீது மடியாத
ஆசை கொண்டேன்
நான் மடிந்தாலும் மறு ஜென்மம்
எடுத்தும் அடைந்தே தீருவேன் மங்கையே..

மாது மறுபடியும் மறுபடியும்
என்னை ஏற்கிறாள்
மடியைக் கொடுத்தும்
என்னை சேர்க்க அவளுடன்..

பாங்கியே பாதரசம் நானடி
எங்கு கண்டாலும்
தனித்தே காண்பாய் என்னை
பரமலோகத்தில்..

கன்னியே உன்னை
களவாடவே நான் வந்த
கருப்பு நிற
கார்கால கண்ணனடி நான்..

பெண்ணே
என் கற்பனையில்
உலாவரும் காதலியே
கண் போல உன்னை காக்க
மனமும் ஏங்குதடி..

எழுதியவர் : (6-Jun-22, 1:51 pm)
Tanglish : penmai
பார்வை : 55

மேலே