ஸ்வீட் நேம்ஸ்
முதல் மகப்பேறிலயே மூணு ஆண் குழந்தைகள் பிறக்கும்னு நாங்க எதிர்பார்க்கல சோசியரே. இந்தாங்க அவங்க பிறந்த தேதி, நேரம் இந்தக் குறிப்பில் இருக்குதுங்க.
@@@@@@@
ஐந்து நிமிடம் சென்றபின் சோதிடர்:
தம்பி இவுங்க பிறந்த நேரம் ரொம்ப ராசியான நேரம். மூன்று பேரும் படிச்சுப் பெரிய பதவிக்கு வருவாங்க. முதலில் பிறந்த பையனுக்கு 'சஞ்சை'னு பேரு வச்சிடு. அடுத்த இரண்டு பேருக்கும் அதே மாதிரி அர்த்தமில்லாத பேருங்கள வச்சிடு. யாராவது கேட்டா மூணு பேருங்களும் இந்திப் பேருங்கதான்னு சொல்லிடு.
#@@@@@@
சோசியரே நீங்களே அந்தப் பேருங்களச் சொல்லிடுங்க.
@@@@@@
என்னையா இதைக்கூட பெத்த குழந்தைங்களுக்கு நீ செய்யக்கூடாதா? சரி நான் சொல்லறேன். முதலில் பிறந்தவன் 'சஞ்சை' ஸ்வீட் நேம். அடுத்தவனோட ஸ்வீட் நேம் 'மஞ்சை'. மூணாவதாப் பிறந்தவனோட ஸ்வீட் நேம் 'பஞ்சை'.
@@@@@@@
அருமை சோசியர் ஐயா. எல்லாம் ஸ்வீட் நேம்ஸ்