வலி ஒன்று தான்

திண்டுக்கல் நாயக்கர் தெருவில் நிறைய கார்கள் மற்றும் பைக்குகள் எதோ விசேஷம் போல் காட்சி அளிக்கிறது அப்படியே சற்று முன் சென்று பார்த்தால் வாசன் மற்றும் ஜானகி அவர்களின் வீட்டு வாழை மரம் மற்றும் தோரணம். யார் இந்த வாசன் இங்கு என்ன நடக்கிறது யாருக்கு நடக்கிறது என்று பார்ப்போம். திண்டுக்கல் மாநகரத்தில் அமைந்துள்ள சிப்காட்டில் ஒரு சிறிய கம்பெனி வைத்துள்ள நபர் தான் வாசன் அந்த காலத்து ITI அவரின் மனைவி ஜானகி திருச்சி மாவட்டம் துவக்குடியை சார்த்த ஹவுஸ் wife . நடுத்தர குடும்பம். இவர்களுக்கு அருண் என்ற மகன் இருக்கிறான் ஒரே மகன். பொறியியல் படித்துவிட்டு மதுரை fenner கம்பெனியில் இணை மேலாளராக பணியாற்றி வருகிறான். இந்த மூவரின் வாழ்வும் மற்றும் இவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதனை பார்ப்போம். சரி வாருங்கள்.

வாசன்: வாங்க வாங்க எப்படி இருக்கீங்க என்று நண்பர் ஒருவரை அழைத்து கொண்டு போகையில்.
ஜானகி: ஏங்க, ஏங்க, என்று வாசனை அழைக்கிறார். இவர்க்கு என்ன தான் கத்தினாலும் காதுல விழாது. அவர் friend டா பார்த்துடா போதும் நம்ம தான் விசேஷ வீட்டுக்காரங்க அப்படினு கூட மறந்துடுவார். டேய் அருண் இங்க வாடா, அப்பா வ கூப்பிடு. பெரியப்பா பெரியம்மா அப்பறம் பாட்டிலா வராங்கனு போய் சொல்லு.
அருண்: சரி அம்மா.
வாசன்: (நண்பர் இடத்தில்) ஒரு வழிய பையனுக்கு ஒரு நல்ல இடத்துல பேசி முடுச்சு இன்னிக்கு நிச்சியம் வரைக்கும் வந்தாச்சு.
வாசன் நண்பர்: எல்லாம் இறைவன் அருள் உன் நல்ல மனசுக்கு என்னைக்கும் குறை வராது.
அருண்: அப்பா உங்கள அம்மா கூப்பிட்டாங்க. சித்தப்பா சித்தி அப்பறம் பாட்டிலா வராங்க.
வாசன்: ஓ அப்படியா. நண்பா நீங்க இங்க இருங்க நான் போயிட்டு வந்துர்றேன்.
வாசன் நண்பர்: ஒன்னும் அவசரம் இல்லை. வேலைய பார்.
ஜானகி: ஏங்க வாசல் வந்து நின்னு வரவங்கள வாங்கனு கேக்க மாட்டிங்களா. உங்க friend வந்த அப்படியே உக்காந்து கதை பேச ஆரம்பிச்சரது.
வாசன்: விடு.. அண்ணா அண்ணி வந்துட்டாங்க.
அருண்: அப்பா நல்ல எஸ்கேப் ஆயிட்டீங்க.
வாசன்: டேய் இதெல்லாம் நீயும் காத்துக்க பின்னாடி use ஆகும்.
வாசன் அவர்களின் தம்பி செந்தில் மற்றும் அவர் மனைவி துர்கா மற்றும் அவர் மகள்கள் இந்திரா மற்றும் கோகிலா. அம்மா வள்ளியம்மை. அப்பா இல்லை. தங்கை மீனாட்சி அவர் கணவர் மணிகண்டன். இவர்களின் மகள் புவனா மற்றும் மகன் அரவிந்த்.
வாசன் மற்றும் ஜானகி: எல்லாரும் வாங்க வாங்க. அம்மா வாங்க, தம்பி, துர்கா, மச்சான், மீனா, அரவிந்த், இந்து கொக்கி எல்லாரும் வாங்க இதான் வர்ற நேரமா?
அம்மா: எங்கடா நேத்து ராத்திரி இங்க இருந்து கிளம்பி வீட்டுல பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரில.
வாசன்: அதான் நான் எல்லாரும் இங்க படுங்கனு சொன்னேன்.
செந்தில்: அண்ணா தங்குறதுனால ஒன்னும் இல்லை இவங்க எல்லாத்துக்கும் வேலை பாத்துட்டு இருந்த எப்போ நம்ம விசேச வேலையை பாக்குறது.
அம்மா: சரி சரி எல்லாத்தையும் இங்கேயே நின்னு பேசணுமா. டேய் அரவிந்த் அருணா கூட்டிட்டு போய் ரெடி ஆகு. எம்மா புள்ளைங்கள நீங்க போய் உள்ள வந்தவங்களுக்கு காபி டி போடுங்க.
மீனா: அம்மா நான் என்ன பண்ண.
அம்மா: நீயும் அண்ணியும் உங்க அண்ணனும் சமையல் என்ன ஆச்சு அப்படினு பாருங்க. ஜானகி நீயும் வாசனும் இங்க இருந்து வர விருந்தாளிகளை
வரவேறுங்க.
ஜானகி: அத்தை நீங்களும் இங்க நில்லுங்க.
அம்மா: இல்லை இல்லை நான் இங்க நிக்க கூடாது.
வாசன்: அம்மா இன்னும்மா இதெல்லாம் நீ நம்பிட்டு இருக்க. சும்மா நில்லும்மா.
அம்மா: போடா முட்டாள். பெரியவங்க சொன்ன காரணம் இருக்கும். நீ சும்மா இரு. நான் சொல்றத கேளு. பொண்ணு வீடு ஆளுங்க வர தடவை ஆயிடுச்சு. நான் உள்ள போய் இந்த பொண்ணுங்க என்ன பண்றங்க அபப்டினு பாக்குறான்.
வாசன்: சரிங்க அம்மா.
ஜானகி: அத்தை வந்த தான் எல்லாம் சொன்னபடி கேப்பாங்க.
வாசன்: ஆமா ஜானகி என்ன எங்க அப்பா இருந்து இருந்த நல்ல இருந்து இருக்கும்.

தொடரும்.........

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (6-Jun-22, 7:31 pm)
சேர்த்தது : Sikkandar
Tanglish : vali ondru thaan
பார்வை : 129

மேலே