மகிழ்ச்சியின் தேடலில் மர்மம் அத்தியாயம் 6
அத்தியாயம் 6
நிஷா: அது வந்து அங்கிள்.. மச்சான் வந்தாங்க நான் டிவி பார்த்துட்டு இருந்தேன். நம்ம மேடம் உள்ள செம்ம அப்செட்ல உக்காந்து இருந்தா.
சிக்கந்தர்: மாமி மாமி! ஏய் வாலு எங்க மாமி? மாமா ? உங்க அக்கா யாரையும் காணோம்?
நிஷா: வாங்க வாங்க மச்சான்! என்ன ஆச்சரியம்! மழை ஏதும் வருதா. இப்போ தான் டிவி செய்தி பார்த்தேன் புயல் வரும் அப்படினு சொன்னாங்க ஆனா எங்க வீட்டுக்குள்ள வரும்னு நான் நினைக்கல மச்சான்.
சிக்கந்தர்: என்னபா சொல்ற பயம்புடுத்துற. எங்க எல்லாம்
நிஷா: அம்மா அத்தா பின்னாடி உக்காந்து இருக்காங்க. உங்க ஆளு உள்ள இருக்க. மேடம் செம்ம அப்செட்.
சிக்கந்தர்: ஆமா இப்போ தான் எங்க அம்மா சொன்னாங்க. சரி நீ சத்தமா பேசி அவளை வெளிய வர வச்சுடாத. தனியா என்னலா சமாளிக்க முடியாது.
நிஷா: ஏன் மச்சான்? கல்யாணம் முடுஞ்ச அப்பறம் வாழ்நாள் fulla நீங்க தான் சமாளிக்க போறீங்க அப்போ என்ன பண்ணுவீங்க.
சிக்கந்தர்: அதை அப்போ பாத்துக்கலாம். சரி நீ மாமி மாமா வை கூப்புடு.
நிஷா: சரி இருங்க.
மாமி: வாங்க வாங்க மாப்ள. எப்போ வந்திங்க? ஏன்டி வந்த உடனே கூப்புடா மாட்டியா? என்ன பண்ணிட்டு இருந்த?
நிஷா: ஏன் நாங்க பேசிட்டு இருந்தோம்.இப்போ என்ன ஆச்சு நாங்க கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்க கூடாதா?
மாமி: உன்ன யாரு பேச வேண்டாம்னு சொன்னது நல்ல பேசு உங்க மச்சான் கிட்ட. எங்ககிட்ட சொன்ன நாங்களும் பேசிட்டு இருப்போம் அதுக்கு சொன்னேன்.
சிக்கந்தர்: விடுங்க மாமி. அது ஒரு வாலு. அம்மா சாப்பாடு குடுத்தாங்க. மாமா எங்க ?
மாமி: ஏண்டி எரும. கைல இருக்குற கூடை கூட வாங்காம தான் பேசிட்டு இருந்தியா நீ? மாமா பின்னாடி இருக்காரு வந்துருவாரு. நீங்க உக்காருங்க முதல்ல. வந்த எங்களை திட்ட போறாரு.
நிஷா: உங்க மருமகன் உன்கிட்ட தான் கொடுப்பாராம். இப்போ என்ன? அவருக்கு கையெல்லாம் வலிக்காது. போலீஸ் ட்ரைனிங் போயிட்டு இருக்காரு அதெல்லாம் பவர் இருக்கும்.
மாமா: வாங்க மாப்பிள்ளை. எப்படி இருக்கீங்க.
சிக்கந்தர்: நல்ல இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க.
மாமா நாங்க நல்ல இருக்கோம். இறைவன் அருளால்.
நிஷா: அம்மா இவ்வளோ நேரம் நம்ம பேசுனோம் நல்ல இருக்கீங்களா அப்படினு நம்ம கேக்கல. அத்தா மட்டும் தான் கேக்குறாங்க. அதன் அம்மா தங்கச்சி பையன் பாசம்.
எல்லாரும்: ஹா ஹா ஹா!
மாமி: இருக்காதா பின்ன. உங்க அத்தா இந்த மருமகன் பிறந்தப்போ இவங்கள எங்க கிட்ட குடுங்க. நாங்க வளத்துக்குறோம் அப்படினு கேட்டாங்க உங்க மாமிகிட்ட. அவங்களும் சரினு சொல்லிட்டாங்க. உங்க தாத்தா தான வேண்டாம் அப்படினு சொல்லிட்டாரு.
நிஷா: இது எப்போ நடந்தது.
மாமா: ஆமா நிஷா. ரஹீமா மாமிக்கு 3 ஆம்பள பசங்க அதனால நஸீமா அங்க குடுத்துட்டு மாப்பிள்ளையா இங்க வளக்கலாம்னு கேட்டான் ஆனா எங்க அத்தா வேண்டாம்னு சொல்லிட்டாரு.
நிஷா: நல்ல வேளை நடக்கல. அப்பறம் நான் எப்படி அவரை கலாய்க்க முடியும்.
மாமி: ஏன்? உனக்கு தான் இவங்களுக்கு மேல ரெண்டு மச்சான் இருக்காங்களா. அப்பறம் என்ன?
நிஷா: ஐயோ அவங்க ரெண்டு பெரும் terror மச்சான்ஸ்.
மாமி: நிஷா டி போடு போ .
நிஷா: அய்யயோ நான் மாட்டேன். அன்னிக்கு சும்மா போடுறேன் போனப்ப அவ ரொம்ப டென்ஷன் ஆகிட்டா. இன்னிக்கு போனேன் என்ன கொன்னுடுவா.
மாமி: சரி நான் அவளை கூப்புடுறேன். நசீமா, நசீமா வெளிய வா. மாப்பிள்ளை வந்து இருக்காங்க பாரு.
நசீமா: என்னவா அவருக்கு இங்க வேலை.
மாமி: வெளிய வாடி. பல்ல உடைச்சிடுவேன். ரொம்ப வாய் அதிகமா ஆயிடுச்சு.
சிக்கந்தர்: விடுங்க மாமி கோவத்துல இருக்க இன்னும் அதிகமா ஆய்டா போகுது.
மாமா: அம்மாடி வெளிய வாம.
நசீமா: வரேன் அத்தா.
சிக்கந்தர்: வாங்க வாங்க மேடம். நீ எப்படியும் வாங்கனு கேக்க மாட்ட. அதான் நான் முந்திகிட்டேன்.
மாமா மாமி & நிஷா: ஹா ஹா ஹா ஹ்ஹ!
மாமி: நசீமா டி போடுறியா. இல்ல நான் இவளை போடா சொல்லவா.
நிஷா: அம்மா ஆணை இடுங்கள் காத்து கொண்டு இருக்கிறேன்.
நசீமா: அதுக்கு நீ உயிரோட இருக்கானும்.
நிஷா: என்ன இது இம்புட்டோனு டி க்கா கொலை மிரட்டல். மச்சான் இவளை கல்யாணம் பண்றதுக்கு யோசிச்சுக்கோங்க என் friends நிறைய பேர் உங்க இன்றோ கேக்குறாங்க. உங்க range வேற எல்லாம் செம்ம அழகு.
சிக்கந்தர்: வேண்டாம் வேண்ட. எல்லாம் உங்க அக்கா அழகு மாதிரி வருமா?
நிஷா: மச்சான் நீங்க வேறே லெவல்... ஐஸ் வைக்கிறிங்க
சிக்கந்தர்: அம்மா தாயே சும்மா இரு நீ.
மாமி: என்ன நிக்கிற போறியா என்ன?
நசீமா: போறேன் போறேன்....
10 நிமிடங்கள் கழித்து....
நசீமா: அம்மா அம்மா இங்க வாங்க டி போட்டாச்சு அவங்க கிட்ட போய் குடுங்க.
மாமி: ரொம்ப பண்ணாத.. வந்து நீயே குடு..
நசீமா: என்னால முடியாது. அவருக்கு அவங்க அம்மா நீங்க வேற இடத்துல பொண்ணு பாக்குறீங்களா அவளை வந்து அவருக்கு குடுக்க சொல்லுங்க.
மாமி: அடியே லூசு லூசு. மாப்பிளையை அப்படி சொன்ன கூட மாமி விடுவார்களா. உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு எந்த சொன்னதே அவங்க தான்.நான் உன்ன சும்மா சீண்டுனேன். உன்ன புரிஞ்சுக்க அவர் நாளா தான் முடியும் அவரை புரிஞ்சுக்க உன்னால தான் முடியும்.
நசீமா: நிஜமாவா?
மாமி: ஆமாம்டி நான் பொய்யா சொல்ல போறேன் நீ வந்து அவர்கிட்ட கேளு.
நசீமா: டி எடுத்துக்கோங்க. அம்மா சொல்றது உண்மையா?
சிக்கந்தர்: யாரு சொன்ன நம்புவ? இரு எங்க அம்மாக்கு போன் பன்றேன்.
ட்ரிங் ட்ரிங்
ரஹீமா: சொல்லு அத்தா.
சிக்கந்தர்: அம்மா சாப்பாடு மாமிகிட்ட கொடுத்துட்டேன். வேற ஏதும் சொல்லனுமா
ரஹீமா: நிச்சயத்துக்கு தேதி பாக்க சொல்லி மாமாகிட்ட சொன்னியா. மாமா வீட்ல இருந்தாங்களா?
சிக்கந்தர்: மாமா இருக்காங்க. யாருக்கு அம்மா நிச்சயம்?
ரஹீமா: என்ன விளையாடுறியா? ஏன் உனக்கு தெரியாத?
சிக்கந்தர்: சும்மா சொல்லுங்க அம்மா.
ரஹீமா: உனக்கும் என் மருமகள் நசீமாக்கும் தான். இது நம்ம என்னிக்கோ எடுத்த முடிவு தானே அதும் உங்க அத்தா ரொம்ப ஆசைப்பாட்டாரு.
சிக்கந்தர்: சரி அம்மா. நம்ம எல்லாருக்கும் தெரியும். இங்க தெரிய வேண்டிய ஒரு ஆள் இருக்கு.
நிஷா: மாமி உங்க மருமகள் உங்கள இவ்வளோ நேரம் என்ன சொல்லிட்டு இருந்தா தெரியுமா? அப் அப் பாப ஏய் வாய்யா போத்ததா. உங்க மருமக என் வாய்யா போத்துரா.
ரஹீமா: உங்க எல்லாருக்கும் அவளை வம்பு இழுக்காட்டி தூக்கம் வராதே. முதல்ல ஆமினா அடிக்கணும். அவ ஆரம்பிச்சது.
நிஷா: மாமி நல்ல யோசுச்சுக்கோங்க இன்னும் நேரம் இருக்கு. இவள் தான் உங்களுக்கு வேணுமா? வேற நல்ல option இருக்கு சொல்லவா?
நசீமா: நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். இது எங்க மாமிக்கும் எனக்கும். நாங்க பேசிக்கிறோம். அவங்க என்னை ஏதும் சொல்லமாட்டாங்க கரெக்ட் தானே மாமி.
ஆமினா: அடிப்பாவி இப்ப வரைக்கும் எப்படி பொங்கிட்டு இருந்த இப்போ பேச்சா பாத்தியா. நல்ல மாமியார் நல்ல மருமகள்.
ரஹீமா: சரி சரி எல்லாரும் சேர்ந்து ரொம்ப வம்பு இழுக்காதீங்க. இப்படி மருமகள் கிடைக்க குடுத்து வச்சு இருக்கணும்.
மாமா: மாப்ள இங்க குடுங்க நான் பேசுறேன். ரஹீமா நான் தேதி பாத்துட்டேன். அடுத்த வாரம் பிறை 13 ரபி உல் அவ்வல் நவம்பர் 13 வச்சுக்கலாம். என்னமா சொல்ற நீ.
ரஹீமா: அண்ணே நீங்க காலைல வீட்டுக்கு வாங்க. நான் மூத்தவனுக ரெண்டு பேரையும் வர சொல்லியிருக்கேன் நம்ம கலந்து பேசிட்டு அபப்டியே. நம்ம இந்த தேதியை எங்க ஆன்மிக குரு அவங்ககிட்ட சொல்லிட்டு அவங்க சரினு சொன்ன உடனே நம்ம அதையே fix பண்ணிட்டு நம்ம சொந்த பந்தங்களுக்கு சொல்லிடுவோம். எல்லாரும் அங்க காலைலேயே வந்துடுங்க. நாளைக்கு இருந்து ராத்திரி சாப்பிட்டு போற மாதிரி வாங்க.
மாமா: சரி ரஹீமா.
ரஹீமா: ஆமீனாகிட்ட குடுங்க போன்.
ஆமீனா: சொல்லுங்க மச்சி.
ரஹீமா: வந்துருமா புள்ளைங்கள கூட்டிகிட்டு.
ஆமினா: மச்சி எங்களுக்கு தனியா சொல்லனுமா.
நிஷா: மாமி நாங்க எல்லாரும் டி குடிக்கவே அங்க வரோம். டோன்ட் ஒர்ரி.
ஹாஹாஹா ஹஹ்ஹ அஹ்ஹ
சிக்கந்தர்: போதுமா. இதுக்கு போய் இந்த அலப்பறை. சரி நானும் கிளம்புறேன். நாளைக்கு பாக்கலாம்.
நசீமா: இருங்க சாப்பிட்டு போலாம்.
நிஷா: டீ போடக்கூட வரல இப்போ சாப்பிட்டு போக சொல்றியா/
நசீமா: எருமை மாடு! பேசமா இரு அது நான் அப்போ கோவமா இருந்தேன். அதெல்லாம் அவங்க ஒன்னும் நினைக்கமாட்டாங்க.
சிக்கந்தர்: உன்ன பத்தி தெரியாத எனக்கு. அம்மாகிட்ட நான் வரேன் சொல்லிட்டான் சாப்புடாம வெயிட் பண்ணுவாங்க. நம்ம நாளைக்கு பாக்கலாம். வரேன் மாமா மாமி ஏய் வாலு கிளம்புறேன்.நசீமா வரேன்.
நிஷா: இதன் அங்கிள் நடந்த கலவரம்.
SP : ஆமீன் சொன்ன மாதிரி அவன் இவளும் இவனை அவளும் தான் புரிஞ்சுக்க முடியும் இடைல யார் போனாலும் பல்பு confirm ...
ஹ் ஹா ஹ் எ எ அஹாஹஹாஹ் .....
தொடரும்..