பொதிகைத் தமிழுன்னால் என்கவிதை ஆனது

நதியலைகள் நீந்துமுன் கருங்கூந்தல்
ஆனதோ
அதிகாலை சிவப்புன் செவ்விதழ்
ஆனதோ
மதிதவழ்ந்து வந்துன் மலர்முகம்
ஆனதோ
பொதிகைத் தமிழுன்னால் என்கவிதை
ஆனது

க வி

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jun-22, 6:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே