என்ன மனிதர்கள் என்ன உலகமடா

காக்கையை கா கா
என்றழைத்து
உணவு ஊட்டுகிறார்கள்
கோழியை வெட்டி
உணவாய் உண்ணுகிறார்கள்
என்ன மனிதர்கள்

ஆட்டுக்கு இரை போடுகிறார்கள்
ஆட்டை வெட்டி
இறைச்சி ஆக்கி
ஒரு வெட்டு வெட்டுகிறார்கள்
என்ன மனிதர்கள்

மீனை பெண்ணின் கண்ணில்
வைத்து அழகு பார்க்கிறார்கள்
மீனையே உணவாக்கி
உண்ணவும் செய்கிறார்கள்
என்ன மனிதர்கள்

ஆமை முதல் எண்ணற்ற
ஜீவராசிகள் ஆடுவது கடல்
அடங்குவது மனிதன் வயிறில்
என்ன உலகமடா

எழுதியவர் : Kavin (17-Jun-22, 11:22 pm)
பார்வை : 105

மேலே