உன் இதய ரேகையில் நான் எப்போது 555

***உன் இதய ரேகையில் நான் எப்போது 555 ***
பேரழகே...
உன்னை
பார்த்ததோ ஒருமுறை...
மீண்டும் உன்னை எப்போது
பார்ப்பேன் எண்ணமுமில்லை...
உன்னால் ஏற்பட்டது
என்னில் காதல் தொல்லை...
மணித்துளிகளும்
உன்னால் நகரவில்லை...
மனது
உன்னையே நினைத்தாலும்...
கண்களில் உன் பிம்பம்
பதிந்திருந்தாலும்...
நீ நிஜத்தில் இல்லை
நினைவில் மட்டுமே...
என் உதடுகள் உன் பெயரை
உச்சரிக்க ஆசை...
உன்
பெயர்தான் என்னவோ...
உனக்காக
காதல் கவிதைகளும்...
காதல் குறுந்செய்திகளும்...
உன் முகவரியும்
தெரியவில்லை...
உன் கைபேசி
என்னும் தெரியவில்லை...
என்
காதல் மட்டும் போதும்...
நம் காதல்
பயணம் தொடங்குகிறது...
வார்த்தைகளில்
கவிதை எழுதுகிறேன்...
நீயோ இதழ்கள் சேர்ந்திருக்கும்
போது ஒரு கவிதையும்...
புன்னகைக்கும் போது
ஒரு கவிதையும்...
உன் உதட்டு
ரேகைகளில் கண்டேன்...
உன் இதயரேகையில்
எப்போது என்னை காண்பேன்...
என் பேரழகே.....
***முதல்பூ.பெ.மணி.....***