அழகியே எச்சரிக்கையாக இரு
மூத்த குடிமகன்களில் சிலர்
பித்தம் தலைக்கேறி வண்புணர்ச்சி
செய்து கைதாவதாக நாளிதழ்களில்
காணொளி செய்திகளில் தகவல்கள்.
அவர்கள் இரட்டை உரிமை பெற்றவர்கள்
வயதில் முதிர்ந்தவர்; டாஸ்மாக் வாடிக்கையாளர்.
குடி மயக்கத்தில் துணிச்சல் கொண்டு
குற்றச்செயல் புரிய அச்சம் அறியார்.
அழகியே மயக்கும் உன் பார்வை
மதுமயக்கர் மீது பட்டுவிடப் போகிறது
ஒதுங்கிப் போ முக்காடு போட்டு!