ஈசனே போற்றி பாகம் 3

அபாயம் என்னை சூழும் போது, அபயம் தந்த ஈசனே.
உன் பாதம் தொட்டு வணங்கும்போது, கவலை தீர்த்த நாதனே.

பொய் நிறைந்த வாழ்வில் இன்று, மெய்யை காட்டும் ஈசனே.
வேடனுக்கும் காட்சி தந்த, கருணையுள்ள வேந்தனே.


பனி மலைகள் சுற்றி இருக்க, என் கண்ணீர் தெரிவதிலையோ.
கணங்கள் இசை, நந்தி ஓசை, என் பேச்சை மறைத்து விட்டதோ.

மனதில் உன்னை நினைத்தபோது, உன் செவிகள் கேட்கவில்லையோ,
யாகம், பூஜை செய்தேன் எனினும், கண்டுகொள்ளவில்லையோ.


உன் அருள் இருந்து உன்னை வணங்கி, உன்னை சேர எண்ணினேன்.
லிங்கம் காணும் போது என்னுள், நீ இருப்பதாய் உணர்கிறேன்.

பூத உடல் கைதியாய், இருப்பதும் என் சாபமோ.
பூலோகத்தின் ஆசை, கோபம், சேர உன்னை தடுக்குமோ.


நாயன்மார்கள் போன்று என்னால், வாழ முடியவில்லையே.
பந்தம், பாசம் இருந்த போதும், பக்தி குறைந்ததில்லையே.

தொலைந்து போன குழந்தை போல், என் ஆன்மா உன்னை தேடுதே.
நீ அள்ளிக்கொண்டு, அருளை தந்து, சேர்த்துக்கொள்ள துடிக்குதே.


கடமை தீர்ந்து, பின் ஜன்மம் இல்லா,
வரத்தை நானும் கேட்கிறேன்.

என் பிறப்பை நிருத்தி, உன்னை சேர.
நாளும் உன்னை வேண்டினேன்.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 6:50 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 16

மேலே