ஈசனே போற்றி பாகம் 2
ராமன் வணங்கிய ஈசனே, என் ஜீவன் வணங்கும் நாதனே.
தர்மம் காக்கும் தேவனே, நம்மை ஆளும் எங்கள் வேந்தனே.
ஐந்து எழுத்து மந்திரத்தால், மோட்சம் தரும் என் ஈசனே.
உன்னை மனதில் நினைத்தால், அன்பை பொழியும் என் நேசனே.
அறிவில்லாமல் தவிக்கும், எனக்கு கல்வி போதித்த குருவே.
பசி பிணி போக்க எனக்கு, உணவு அளித்த என் தாயே.
சூரியன் சுடும் வேளையில், மேக நிழல் தந்த தேவனே.
பிள்ளைக்கு வழி காட்டும் தந்தை போல், ஆன்மாவுக்கு வழி காட்டும் ஈசனே.
தந்தையும் தாயும் நீயே இனி என்று, வாழ வழி கேட்கும் பிள்ளை நானே.
உன் பாதம் பற்றி வேண்டும், இந்த பாலகனும் உன் பிள்ளை தானே.
இராவணன் போன்று உன்னை, எனக்கு மட்டும் என கேட்கவில்லை.
கடை கண்பார்வை மட்டுமே போதும், வேறு எதையும் வேண்டுவதில்லை.
தாயாய், தந்தையாய், குருவாய், என்னை நல்வழிப்படுத்தி அருள்வாய்.
உன்னை சேரும் வரை காத்து என்னை, உள்ளத்தில் நினைத்திருப்பாய்.
வரம் கேட்டு, ஆசை வளர்த்து, மீண்டும் பிறப்பு வேண்டாம்.
உன் திருவடி மோட்சம் வேண்டும், எனக்கு வேறு எதுவும் வேண்டாம்