ஈசனே போற்றி பாகம் 1

உன்னை கண்டு வியந்தேனே, உன்னை நினைத்து மகிழ்ந்தேனே,
உன்னை மட்டும் என்றும் தொழுவேன்.


என்னையாளும் சிவனே, நான் உன்னை பாட கற்றேனே,
தமிழ் என்ற அமுத மொழியே.


தொண்டற்கு தொண்டன் நீ என்றே அறிந்ததும்,
நீக்கியது அகந்தையை மனமே.


கார் இருலில் வெளிச்சமாக நீ இருப்பாய் என
உன்னை நாடி ஓடி வந்தேன்


கல்லால் அடித்தவனும், காலால் உதைத்தவனும்
இமயத்தை தூக்கியவனும்.


அரக்கனே ஆயினும், உன் பக்தன் ஆகவே
பிறப்பொன்று எடுத்தனரோ?


உன் அருள் இருந்தாலே என் ஜன்மம் தீருமே
யோகம் அது எனக்கு அல்லவோ?


பூத உடல் கைதியாய், உறக்கம் பசி வாட்டியே,
இவ்வுலகில் அலைவதேனோ?


என் கடமை யாதென, எனக்கு உணர வைக்க நீ,
நாடகத்தை நடத்தினாயோ?


இராவணன் ஒரு ராட்சசன், கொடுமை பல செய்தவன்.
ஆனாலும் உன் அருள் பெற்றவன்.


கண்ணப்பர் தன் காலாலே, உன் கண்ணை உதைத்தவன்.
அவரும் உன் அருள் பெற்றவன்.


இவரை விட தவரென்ன செய்தேனோ, என்னை நீ
மன்னித்து அருள் புரிவாய்


பிறப்பறுக்கும் தேவனே, என் வினைகளை தீர்த்து நீ
நல் வழியைக் காட்டிடுவாய்.


சிவனே இனி என் கதி, உன் வழியே என் விதி
முக்தி அளித்திடுவாய்


சிந்தையில் இருந்து நீ, சிதறாமல் நிலை பெற்று,
என்றும் உன் அருள் பொழிவாய்

எழுதியவர் : (19-Jun-22, 6:48 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 18

மேலே