ஈசனே போற்றி பாகம் 4

அடி உயரம் உயர்ந்தாலும், கர்வம் தலைக்கேறி, உன்னை மறவாத மனம் வேண்டுமே.

ஆடும் என் கால்களை, உன் சக்தி கொண்ட நீ, தடம் மாறா வரம் வேண்டுமே.

இன்னிசை செவிகளில், கேட்கும்போதெல்லாம் உன், அருள் வாக்கு நினைவில் வருமே.

ஈசனே போற்றி என, நித்தமும் பாடிடும், வாழ்நாள் அருள் வேண்டுமே.

உன்னை நினைக்கும் பொழுதெல்லாம், குறையாமல் நீள உன், நினைவால் நான் வாழவேண்டுமே.

ஊமையாய், சிற்பமாய், இருப்பதால் உன் பெருமை, மூடனால் கலங்க படுமோ.

என் இரண்டு கண்களால், லிங்கத்தை காண்கையில், மனம் அமைதி ஆகின்றதே.

ஏன் இந்த பிரவி என, கேட்கும்போதெல்லாம் என், பிள்ளை முகம் காட்டுகிறதே.

ஐந்தெழுத்து மந்திரம், சொல்லி உன்னை வணங்கினால், கஷ்டங்கள் மறைகின்றதே.

ஒவ்வொரு உயிரிலும், உன் அம்சம் கண்டு நான், வியக்காமல் இருந்ததில்லையே.

ஓம் என்ற பிரணவத்தின், அர்த்தம் நீ என்பதை, நான் உணர செய்தாய் நீயே.

ஔவையார் உன் பிள்ளையிடம், தமிழ் மூன்றும் பெற்றபின், பசி உறக்கம் நீக்கினாரே.

மனிதனின் உயிர் போன்ற, தமிழ் உயிர் எழுத்தால் உன், புகழ் பாட எண்ணம் கொண்டேன்.

பிள்ளை என நினைத்து என், பிழைகளை மன்னித்து, உன்னுடன் கூட்டிச்செல்வாய்.

எழுதியவர் : Vignesh (19-Jun-22, 6:51 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 8

மேலே