தெளிவின் பிறப்பு

நம்ப வைத்து மோசம் செய்த துரோகி முன்னே வருகையில்,
பட்ட காயம் குருதி சொட்ட வலியில் உடலும் துடிக்கயில்.
துரோகி முகத்தில் சிரிப்பை கண்டு தீர்த்த வஞ்சம் புரிகையில்.
நிகழ்ந்த செயலின் தொடக்கம் தேட மனமோ இன்று நினைக்குதே.

முயற்சி இல்லா ஆசை வளர்த்து தகுதி இழந்து நிற்பதும்.
கற்கும் ஞானம் முழுமை பெறாத நிலையை தானே கொண்டதும்.
தகுதி இருந்தும் பயிற்சி இல்லா தேர்வை தேர்ந்தெடுத்ததும்.
துரோகி விரித்த வலையே அல்ல, நானே செய்த செயல்.

திறமை அறிந்து ஆசை வளர்க்கும் நபர்கள் அதை அடைவதும்.
கற்கும் வேளை பொறுமை காத்து ஞானம் முழுமை பெறுவதும்.
பயிற்சி செய்து திறமை வளர்த்து காலம் வரை காத்திருக்கும்.
மனிதனுக்கு துரோகம் செய்யும் காயம் குறையும் வலிமை பெறுகும்.

எழுதியவர் : (19-Jun-22, 7:30 pm)
சேர்த்தது : Vignesh
பார்வை : 35

மேலே