ஊடலில் தோற்றார் கூடிமகிழ்வர்
நேரிசை வெண்பா
காதலில் வென்றவர் யாரெனின் ஊடலதன்
சோதனை யில்யாருந் தோற்றாராம் -- வேதனை
கூட லிலவர்கூட் டும்மகிழ்வு காட்டுமாடி
ஊடலில் தோற்றாரை யும்
பொருள்:
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது தெள்ளத் தெளிவாய் ஆடிபோல
கூடிடும் மகிழ்ச்சியேக் காட்டி உணரத்தும்
காமத்துப்பால். குறள். 7/25. வதுப்பாடல்
......