அப்பா அப்பா நீயப்பா
அப்பா அப்பா நீயப்பா; 
ஆண்ட தெய்வமே நீதானப்பா; 
மாண்டே போனாலும்; 
மீண்டும் மீண்டும் மனதில் நின்றாய் அப்பா; 
அப்பா நீ என் ஆயுல் ரேகை அப்பா; 
உண்டோ உறங்காமல் ஊமையாய்,
 உயிர் கொடுத்து வளர்த்தாய் அப்பா; 
வந்த கஷ்டங்களை மனசில் ஏற்றி மகிழ்சியாய் எங்களை வைப்பாய்; 
அப்பா என்றால் அப்பாவி; 
அப்பா என்ற வார்த்தையைக் கேட்டால் ,
ஆயிரம் யானை பலம் பிறக்கும்; 
அப்பா என்றால் அப்பும் பாசம்; 
அப்பா பாசம் அப்படியே மனக்கும்; 
சுத்தமான பாசம்; சுகம் துக்கம் தங்கிய பாசம்; 
தப்பாய் என்னை வளர்க்காது தலை நிமிர வைத்த பாசம்; 
தந்தையாய் இருந்து தந்தாய்; 
அனைத்தையும் தடுமாற விடாது,
 தலைக்க வைத்தாய் அய்யா; 
நீயென் அதிசயப் புத்தகம்; 
கல்லாய் நின்றாய்; கடமைகளைச் செய்தாய்; 
சொல்லாமல் தந்தாய்; சொல்லியே தந்தாய் உழகில் வாழ;
 ஊன்றுகோலய் நின்றாய்; 
உண்மை உலகை காட்டினாய்;
 தந்தையாய் நின்று தந்தாய் வித்தைகள் பல; 
தண்டிக்கவும் செய்தாய்; கண்டிப்பாய் இருந்தாய்; 
கடமைகள் செய்ய கற்றுத்தந்தாய்; 
கனிவாய் இருந்தாய்; கண்கலங்க வைத்தாய்; 
குடும்ப சுமையை சுகமாய் தூக்கியே,
குறை தெரியாது வளர்த்தாயே அப்பா; 
துக்கத்தை உன்மனதில் சுமந்தாய்,
தொல்லைகள் பல வந்தாலும் தொடர்ந்தே வந்து துடைத்துவிட்டாய்;
உனக்கென்று எதையும் வைத்துக்குள்ளது,
உன்பிள்ளைகளுக்கு கொடுத்தே மகிழ்ந்தாய்;
 உள்ளுக்குள் வெந்தாலும்; உடல் வருத்தியே வளர்த்தாய்;
 கடனை உடனையாவது வாங்கி கண்ணும் கருத்துமாய் வளர்த்தாயே அப்பா; கஷ்டத்திலும் கண்ணீர் வடிப்பது தெரியாது; 
கவலையை வெளியில் காட்டாது வளர்த்தவன் நீயே அப்பா;
 ஓட்ட சைக்கில் தான், ஓரு பக்கம் சரிய மூச்சிக் காத்தை வாங்கியே, 
மிதித்து போனாயே; 
வச்ச என் கண்ணும் வடிக்குமே ஆயிரம் கண்ணீர் துளிகள்;
 பிச்ச மனசில பிசினாட்டம் ஒட்டி புட்ட; 
எத்தனை வதைகள், எங்கெங்கே இழிவுகள்;
 எல்லா வற்றையும், மௌனமாக சுமந்தாயே;
போட்டி உலகத்திலே போராடி போராடி காப்பாற்றினாய்; 
பொல்லாத உலகம், உனக்கு கொடுத்ததெல்லாம்,
 இல்லாமை பட்டம். 
பொத்தி பொத்தி வளர்த்தாய்; புத்தியை போதித்தாய்;
 இரவுல வந்து எழுப்பியே கொடுத்த, 
ஒரு வாய் பால்சோறுலதான், உன்பாசம் வடிந்ததையா;
 கட்டாத வயிற்றிலே, கால் கஞ்சி குடிச்சிவிட்டு,
வம்பாக பல வேலை வீம்பாக செய்தாயே. 
மஞ்சப்பை பவாசம், மனசுல வீசும்; 
மாடாய் சுற்றி ஓடாய் மெலிந்து எங்களை காத்து வந்தாய்; 
ஊமையாய் இருந்தாய்; உழைத்தே குடும்ப பாரத்தை சுமந்தாய்;
 உலகம் பொல்லாதது என்பதை கற்றுத்தந்தாய்; 
கண்ணில் கோபத்தை காட்டினாலும்; 
கண்ணியத்துடன் வாழ கற்றுத்தந்தாய் ; 
இறுக்கமாக இருந்தாலும் இதயதில் பாசத்தை வடித்தாய்;
எங்கள் இதய தெய்வமே நீதானப்பா;
சுமைதாங்கியாக நீயிருக்க, சுகமாய் நான் வளர்ந்தேன்; 
இடிதாங்கியாக நீயிருக்க, 
இரவும் பகலும் இன்னல்கள் இடையூறு தெரியாமல் நான் வளர்ந்தேன்; 
வேர்வை  சிந்தை வேதனை சுமந்து 
வெளியில் காட்டாது என்னை வளர்த்தாய்;
வேராய் நீ தாங்கினாய்;
விருச்சமாய் நாங்கள் வளர்ந்தோம்; 
உடலை வருத்தி உயிரை எங்களுக்காக தந்தாய்; 
உன் தோள்பட்டையில் ஏறி பயணம் செய்ததை நினைத்தாலே;
சுகமோ சுகம்தான்;
 கடவுளை நீ இருந்தாய், 
கடமைகள் பல செய்தாய்; 
பிஞ்சி வயதில் என்பாதம் உன் நெஞ்சில் பதிய;
கொஞ்சி விளையாடினாய்;
பத்துமாதம் வயிற்றில் சுமந்தாள் தாய்;
பத்திரமாக வாழ்நாள் முழுவதும் சுமந்தவர் என் அப்பா;
பெண் குழந்தையின் ஹீரோவே அப்பாக்கள்; 
எனக்காக வாழ்ந்தவர் எங்கள் அப்பா;
என்னுள் இன்றும் என்றும் வாழ்பவர் எங்கள் அப்பா;
காலையில எழுப்பிவிட்டு, கட கடனு படிக்க வைச்ச; 
தன் மானத்தைத் தள்ளியே வச்சி;
என் மானத்திற்காக எங்கெல்லாம் கடன் வாங்கினாயோ;
ஏணியாய் இருந்தாய்; ஏற்றி விட்டே மகிழந்தாய்; 
கதைகள் ஆயிரம் கூறி வளர்த்து புட்ட; 
வேதாளம் கதைதான் விரு விருன்னு கேட்டுபுட்டேன்; 
சைக்கிளில் தான் வச்சி என்னை சுத்திபுட்ட; 
மிதிச்ச சைக்கிள பாசத்தை சுமந்து என் மனச தச்சிபுட்ட; 
சிறுவயது நினைப்பு இது; 
பருவம் மாறினாலும், உருவம் மாறினாலும், 
உங்கள் மேல் கொண்ட பயம், இன்னமும் கண்கள் சொல்லும்;
எங்கே போய் சொல்லுவேன்;
ஏங்கிய அன்பை. 
எங்கய்யா எனக்கே அய்யா; 
எல்லாத் தொல்லைகளையும் எங்களுக்காக தாங்கிய அய்யா; 
தூங்கிய நேரம் சிலமணிகளே அய்யா;
சிறுத்தையாய் பாய்ந்தாலும் சிரிக்க வைத்தவர் அவர் அய்யா;
பக்கோடா பால்கோ வோ வாங்கித்தின்ன நாக்கும் நன்றி சொல்லும்;
படித்த காலத்திலே பைசா இல்லையென்றாலும்,
பொறிகடலையை வாங்கிக் கொடுத்து,படிக்க வச்ச 
வேலை கிடைக்காத நாட்களிலே வெறுதாக இருந்தாலும்; 
சிரமம் பார்க்காமல், சினிமா பார்க்க காசு தந்த; 
நீ படிக்காத மேதையய்யா; 
வேலை கிடைத்த காலத்திலே பெருமை பல பேசி திரிந்தாய்;
எங்கப்பா எனக்கு ஹீரோதான்; 
அப்பா என்றால் அப்படியே அப்பும் பாசம் 
எத்தனை அப்பாக்கள் உலகிற்கு வந்தாலும்,
எங்கப்பா எனக்கு தங்கப்பாதான். 
தந்தையர் தினம்- ஜூன் 19 -  தரும் ஆயிரம் ஆயிரம் பலம்; 
தன்னையே அர்ப்பணித்த தந்தையை;
தந்தையர் தினத்தன்று தலை குனிந்து, 
கை கூப்பி  வணங்கியே  போற்றுவோம்.
 
                    

 
                             
                            