அனுபவம்..!!

எந்த ஒரு காரியத்திலும்
அனுபவப்பட கற்றுக்கொள்
இங்கு யாரும் அசிங்க படாமல்
வெற்றி பெற்றதாக
சரித்திரம் கிடையாது..!!

பத்து பேர் உன்னை
உயர்த்த கை கொடுத்தாலும்
ஒருவர் அசிங்கப்படுத்த நினைத்தால்
துவளாதே அந்த ஒருவரால்
முன்னுக்கு வருவது நிச்சயம்..!!

ஆயிரம் புத்தகங்களை
பயில்வதை விட
ஒருமுறை அசிங்கம் பட்டால்
புத்தகங்கள் சொல்லித்தராத
பாடம் உனக்குள் வந்துவிடும்..!!

இன்ப துன்பங்களை
அனைத்தையும் சமமாக
எடுத்துக் கொள்
கட்டாயம் வெற்றி
உன்னைத் தேடி வரும்..!!

எழுதியவர் : (27-Jun-22, 8:02 am)
பார்வை : 47

சிறந்த கவிதைகள்

மேலே