இந்தி கஞ்சா
பாட்டி பெயர் அஞ்சனா
அம்மா பெயர் சஞ்சனா
பேத்தியின் பெயரைச் சொன்னால்
காவலர்கள் அவர்கள் வீட்டை
நோட்டமிட்டு விசாரணைக்கு
கையோடு அழைத்துச் செல்வார்
உண்மையைச் சொன்ன பிறகே
வீட்டுக்குப் போகச் சொல்வார்.
தமிழில் போதைப் பொருளாகும்
இந்தியில் அப்பெயர் 'பறவை'யாகும்
தமிழ்க் கஞ்சாவுக்குத் தடை
இந்திக் கஞ்சா இனிய பெண்பால் பெயர்.
அம்மா அழைப்பார் அவளை:
"கஞ்சா இங்கே வாடி
அஞ்சா நெஞ்சம் கொண்டு
நீ தான் இனிக்கும் கண்டு!"*
* கற்கண்டு.
##############
Kanja = Bird 🐦. Feminine name. Indian origin.
மற்ற பெயர்களின் பொருளை
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாடாகாம்ல் பார்க்கவும்.