போலியாய்த் தமிழைக் கொண்டார் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
கவிதையைச் சொல்லித் தந்தோம்
..கருத்துடன் சொல்லி வைத்தோம்!
புவியினில் எதுகை மோனை
..புரிந்திடும் வகையில் சொன்னோம்!
தவிப்புடன் மீண்டும் மீண்டும்
..தனித்தனிப் பாட்டில் சொன்னோம்!
புவியினில் புரிந்தார் இல்லை;
..போலியாய்த் தமிழைக் கொண்டார்!
– வ.க.கன்னியப்பன்