நலங்கள் என்றும் உடன்வருமே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 5 / காய்)
(1, 4 சீர்களில் மோனை)

முன்னம் செய்த வினைகள்
..முற்றும் சூழும் பின்னாளில்;
வன்மம் இல்லா வாழ்க்கை
..வளங்கள் பெருகத் தந்திடுமே!
பின்னம் இல்லா வாழ்க்கை
..பெருமை பலவாய் நல்கிடுமே;
நன்மை பலர்க்கும் செய்தால்
..நலங்கள் என்றும் உடன்வருமே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-22, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே