வாலையவள் சாலச் சிறந்தவன்னை சாற்று - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மாலைப் பொழுதெழுதும் மாசிலா ஓவியம்
மேலை இளந்தென்றல் மென்குண - வாலையவள்
நீலவிழிக் காரியிவள் நெஞ்சினில் நிற்பவளே
சாலச் சிறந்தவன்னை சாற்று!

– வ.க.கன்னியப்பன்

குறிப்பு:

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சரியம் மெத்தமெத்த அதுதான் பாரு! - கருவூர் சித்தர்

9 வயதில் இருந்து பூப்பெய்தாத சிறுமி வயது ரூபமே வாலைக்குமரி!

வாலைக்குமரியாக பருவம் எய்தாத குழந்தை / குமரி - பருவப் பெண்ணாக சித்தர்களுக்கு சக்தியாக இருந்து தமிழ் ஞானம் ஊட்டியவளே தமிழன்னை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-22, 7:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே