என் காதல்

காலையில் எழுந்ததும் சோம்பல் முறிக்காமல் அவன் அனுப்பும் "good morning" அழகு❤

வேலைப்பளுவின் மத்தியிலும் இடையிடையே அவன் அனுப்பும் காதல் வார்த்தைகள் அழகு❤

இருவரும் சேர்ந்தே போகையிலும் ஓர் அடி முன்னே போகும் அவனின் சாய்ந்த நடை அழகு❤

தவறி உளறிக் கொட்டிய தருணங்களில் கண்ணில் பயத்துடன் அவனைப் பார்க்கையில் அவன் உதடு கடிக்கையில் பேரழகு❤

சிறுவனாய் என்னுடன் விளையாடி
நான் தோற்றுப் போகையில் அவன் முகத்தில் தோன்றும் பிரகாசம் ஆயிரம் அழகு❤

அவன் முத்துப்பல் தெரியும் புன்னகை
ஈடு இணை இல்லா அழகு❤

குலுங்கக் குலுங்கச் சிரிக்கையில்
கண்ணின் ஓரம் தோன்றும் சிரிப்பு கொள்ளை அழகு❤

சிறு சிறு கோபங்களின் போதெல்லாம்
அதனை சரிசெய்யும் அவனின் கொஞ்சல் அழகோ அழகு❤

என் அருகில் இருக்கையில் பேச்சின் நடுவில் அவன் கொள்ளும் நிம்மதியான உறக்கம்
அழகு❤

ஆயிரம் முறை அவன் சொல்லும் உனக்காய் நான் இருக்கிறேன்
எனக்கான அழகு❤

அவன் கைக்குள் நான் அடங்கியிருக்கையில்
என் தந்தையின் அழகு❤

நான் தூங்கும் பொழுதுகளில் என்னைப் பார்த்து இரசித்திடும் அவன் கண்
அத்தனை அழகு❤❤

சின்னக் கோபங்களும் செல்லச் சீண்டல்களும்
என்னவனின் தனி அழகு❤

அடுத்தவர் முன்னிலையில் அவன் வீசும் ஓரப்பார்வைகளும் அழகு

எழுதியவர் : சதனிகா (4-Jul-22, 8:45 pm)
சேர்த்தது : Sathaniga
Tanglish : en kaadhal
பார்வை : 121

மேலே