என்னவனே
..
அளவற்ற அன்பை
அதிக கோபம் கொண்டு
என்னை ஆள்பவனே...
திகட்டாத காதலையும்
தித்திப்பான அன்பையும்...
மிச்சமின்றி அமுதமாக
தருபவனே...
ஆயுதமில்லாமல் அன்பு போர்கொண்டு
என்னை விழிகளால் வீழ்த்தியவனே...
என் அன்னைக்கு நிகரான அன்பை
ஆயுள் முழுவதும் எனக்கு தருபவனே...
வரம் வேண்டுமடா...
என் விழிகள் நிரந்தரமாக
உறங்கும் நேரம்...
உன் விழிகளில் என்னை
காணும் வரம் வேண்டுமடா...
உன் அன்பு முத்தங்களுடன்
நான் மண்ணில் மடிய வேண்டுமடா...
என் உயிரில் கலந்த
என் மன்னவனே.