சிப்பிக்குள் இருந்து முத்தொன்று பிறந்தநாள் 555

***சிப்பிக்குள் இருந்து முத்தொன்று பிறந்தநாள் 555 ***பூத்து வரும் புன்னகையே
நீ பிறந்தநாள் தான் இன்று...

இன்று மலர்ந்த உனக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

உனக்கு எத்தனை
வயது வந்தாலும்...

நீ
என் இளவரசன்தான்...

வாழ்த்துக்கள் சொல்

வார்த்தைகள் இல்லை...

உணர்வுகள்
மட்டுமே உள்ளது...

எப்படி வெளிப்படுத்துவேன்
அரபு நாட்டில் நான்.
..

என் மகனே
உன் விரல் பிடித்து...

உனக்கு நடைபழக
சொல்லி தரவில்லை...

நீ என் விரல் பிடித்து
என்னை அழைத்து செல்கிறாய்...

உன் தாய் உன்னை
வயிற்றில் சுமந்தாள்...

நான்
உன்னையும் உன்
தாயையும் நெஞ்சில் சுமக்கிறேன்...

என் செல்லமே முதன் முதலில் உன்னை
கைகளில் ஏந்தி அந்த நிமிடம்...

என் கண்களில்
நீர் நிரம்பியது...

இன்று நான்கு பிறந்தநாள்

நீ கொண்டாடிட..

உன்னருகில்
நான் இல்லை...

அந்த சந்தோச நிமிடங்களை
உன்னோடு சேர்
ந்து கொண்டாடிட...

என்றும்
நீ நீயாக இரு...

உன் எதிர்கால கனவுகளை
நான் சுமக்கிறேன் என்
செல்லமே...

இனிய உதயநாள்
நல் வாழ்த்துக்கள் செல்லமே.....


***முதல்பூ பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (4-Jul-22, 8:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 217

மேலே