பியா - மியா

பியா, மியா இங்க வாங்கடி.

என்னங்க இது? பியா, மியா!

என்னோட இரட்டைப் பெண் குழந்தைகளின் பேருங்கதான் 'பியா, மியா'.

இப்பிடியும் பேருங்களா? என்ன அநியாமுங்க இது?


நம்ம தமிழர் வழக்கப்படி தமிழ்ப் சேருங்கள் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்கிறதில்லை. தமிழ்ப் சேருங்கள அவுங்க பள்ளி ஆசிரியர்களே கேவலமாகப் பாக்குறாங்க. அதுக்காகத்தான் நம்ம ஊரில் மட்டும் இல்ல உலகத் தமிழர்கள் யாரும் வைக்காத இந்தப் சேருங்கள் எம் பிள்ளைகளுக்கு வச்சிருக்கிறோம். அது தப்புங்களா?


பிள்ளைகளுக்குப் பேரு வைக்கிறது பெத்தவங்களோட உரிமை. ஆனா இந்தப் ''பியா, மியா'?


ஓ.. பியா மியாவுக்கு அர்த்தம் என்னன்னு கேட்கிறீர்களா?


ஆமாங்க.

'பியா' (Piya = tree). 'மியா' (Mia = beloved).

பியானு வச்சதுக்குப் பதிலா 'மரம்'னு பேரு வச்சிருக்கலாமே? மியானு பேரைத் தமிழ்ப்படுத்தி 'அன்பிற்குரிய'னு வச்சிருக்கலாமே?

அர்த்தம் தெரியாம இருந்தால் தாங்க மதிப்பு. மந்திரம் தந்திரம் எல்லோருக்கும் தெரிஞ்சா மந்திரவாதிகள், தந்திரங்கள் செய்யறங்க பிழைப்பு என்ன ஆகறதுங்க? அது மாதிரி பல பிறமொழிப் பேருங்களோட அர்த்தம் தெரிஞ்சா மக்கள் கேவலமா நெனச்சு அந்தப் சேருங்கள் கிண்டல் பண்ணுவாங்க‌. மரம் இங்க வாடினு சொன்னா எம் பொண்ணு அழமாட்டாளா?
'அன்பிற்குரிய' போகுதடானு ஒரு பையன் சொன்னா எங்க 'மியா'வல அதைத் தாங்கிக்க முடியுங்களா?

இதுக்கெல்லாம் நான் என்ன சொல்லறதுங்க. மியா ஜிந்தாபாத். பியா ஜிந்தாபாத்.

***********************************
Piya - Indian origin.
Mia - English, Danish, Indian origin.

எழுதியவர் : மலர் (6-Jul-22, 11:28 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 48

மேலே