என் மனது எல்லா விதிகளையும் மீறி உன் பின்னால் தொடர்கிறது

ஒரு வழிச்சாலையின் எதிர்த்
திசையில் உனைப் பார்த்தேன்.
அந்நொடி என்னுள் ஆயிரம் பரவசம்.
"யூ-டர்ன்" போட முடியாத இடம்.
எப்படியும் திரும்புவேன் என
என்னைப் பிடிக்க காத்துக்கொண்டிருக்கும்
போக்குவரத்துக் காவலர்.
அவர் ஏமாந்து போனார்.
நான் சாலை விதிகளை மீறவில்லை.
உன்னைக் கடந்து போனேன்.
எனக்கு மட்டும்தானே தெரியும்,
என் மனது எல்லா விதிகளையும் மீறி
உன் பின்னால் தொடர்கிறது என்று.

எழுதியவர் : மனுநீதி (6-Jul-22, 4:29 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 62

மேலே