வாழ்நாளுள் பன்னோய் கவற்றப் பரிந்து குறையென்னை அன்னோ – அறநெறிச்சாரம் 128

நேரிசை வெண்பா

வாழ்நாளிற் பாகம் துயில்நீக்கி மற்றவற்றுள்
வீழ்நாள் இடர்மூப்பு மெய்கொள்ளும் - வாழ்நாளுள்
பன்னோய் கவற்றப் பரிந்து குறையென்னை
அன்னோ அளித்திவ் வுலகு 128

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஆயுட்காலத்தில் பாதியை உறக்கத்தில் கழித்து மறுபாதியில் தளர்கின்ற காலத்தில் துன்பத்துக்குக் காரணமாகிய கிழத்தன்மையை உடல் அடையும்; துயிலும் மூப்பும் போக உள்ள வாழ்நாளில் பல துன்பங்கள் வருத்த வருத்துவதனாலாங் காரியம் யாது? இவ்வுலக வாழ்க்கை ஐயோ, இரங்கத்தக்கது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-22, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே