யாருன்னு தெரியல
பெண் பித்தன் ஒருவன்
தன் காமப்பசியை
போக்கிக்கொள்ள
வெக்கமில்லாமல்
பெண்ணிடம்
தரம் தாழ்ந்து போய்
அவள் கேட்கும்
பணத்தை கொடுத்து
விலை போனவன்...!!
காமப்பசி
போக்கியவளை
அன்னலட்சுமியென்று
அழைக்க வேண்டாம்...!!
மாறாக தரம் கெட்ட
வார்த்தையால் திட்டி
சமுதாயம் அவளுக்கு
கொடுக்கும் பட்டம்
"விபச்சாரி"...!!
விந்தையான உலகத்தில்
தரம் கெட்ட மனிதர்கள்
யாருன்னு தெரியல.....!!
--கோவை சுபா