தியாகத் திருநாள் ஈத் முபாரக்
இஸ்லாமிய ஐந்தாம் கடமையை
போர்த்திய வண்ணம்,
இறை அருளை நாடியே...
அரபா எனும் மைதான வணக்கத்தில்
வளம் சூழ ,
முழு உலக தக்பீர் முழக்கத்தோடு
வெண்ணிறாடை தேகத்தில் ஜொலிக்க,
இறைவன் ஆசியேய் மனதில் ஏந்தி ...
பாவமற்ற ஜென்மமெடுத்து ,
பாவமரியா கைக்குழந்தை இவனோ எனும்
அவதார சின்னத்தோடு,
தம் வீடு திரும்பும் பல லட்ச ஹாஜிகளுக்கும்
இலட்சிய நோக்கத்தோடு, வரும் வருடமேனும்
இக்கடமையெய் நிறைவேற்றும் கனவில் காத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும்
இன்முக தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் .
ஈத் முபாரக் ! ஈத் முபாரக் ! ஈத் முபாரக் !