விவசாயி

வானம் பார்த்து
ஏறு பூட்டி
விதை விதைத்து
முப்போகம்
விளைச்சல்யென்று
விவசாயம் பார்த்து
தலை நிமிர்ந்து
நடந்து சென்றான்
விவசாயி... ம்ம்
அது அந்த காலம்...!!

ஆனா... இந்த காலமோ
என்னவென்று சொல்வது
விவசாயம் பார்ப்பவன்
வீதியில் நிற்கின்றான்
விதை பொருளை
வாங்குவதற்கும்
விளைந்த பொருளை
விற்பதற்கும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Jul-22, 7:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vivasaayi
பார்வை : 195

மேலே