தேய்ந்திடா முழுநிலவு பாடிடும் காதல் கீதமோ

ஓய்ந்திடா தோசை செய்யும் நீலக் கடலினில்
பாய்ந்து வருமலை களில்பாட லொன்று கேட்குது
சாய்ந்து வரும்மாலை நீலவானில் எழுந்து வந்த
தேய்ந்திடா முழுநிலவு பாடிடும் காதல் கீதமோ ?

------இது கலித்துறை ஒரே எதுகை ஒய் பாய் சாய் தேய் ---ஐந்து சீர்
நாலடிகள்
கலிவிருத்தத்தை கம்பனில் பார்த்தோம்
கலிவிருத்தம் நான்கு சீர்கள் கலித்துறை ஐந்து சீர்கள் அவ்வளவே

சில புணர்ச்சிக் குறிப்புகள் :

ஓய்ந்திடாமல் தோசை பாட்டிதான் செய்வாள் நீலக்கடல் செய்யுமா ?
ஓய்ந்ந்திடாது + ஓசை என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்

பாய்ந்து வருமலை களில் ---மலை பாய்ந்து வருமா ?நீ தான் மலையை நோக்கி பாய்ந்து
ஓட வேண்டும் .
பாய்ந்து + வரும் + அலைகளில் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-22, 10:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே