அந்தமானும் நம்மையே பார்க்குது
பனிபொழியும் இளங்காலைப் பொழுதினில்நீ உன்னிரு
செவ்விதழில் மணிமுத்து உருண்டிட தோட்டத்தில்
பூப்பறிக்கும் வேளைதனில் அங்குநானும் வந்திட
அந்தமானும் நம்மையே பார்க்குது
----இது கலிப்பாவின் ஒரு வகையான வெண்கலிப்பா
ஆர்வலர்களுக்கு சில யாப்புக் குறிப்புகள் :--
தொல்காப்பியரின் நாலுவகைப்பாக்கள்
1 வெண்பா 2 ஆசிரியப்பா 3 வஞ்சிப்பா 4 . கலிப்பா
காய் முன் நிரை வரும் கலித்தளையும் வெண்டளையும் விரவி வந்து ஈற்றடி முச்சீராலும்
மற்ற அடிகள் நான்கு சீராலும் அமைந்து நாலு அடிகளில் நடக்கும்
இந்த வெண்கலிப்பா
நேர் நிரை நிரை கூவிளங்கனி நிரை நிரை நிரை கருவிளங்கனி
இந்த விளங்கனிச் சீர் இப்பாவில் வருதல் கூடாது
ஈற்றடி தவிர மற்ற அடிகளில் மாச் சீர் தேமா புளிமா வரக்கூடாது
ஆசிரியப்பாவும் நிரை நடுவான இந்த விளங்கனிச் சீரை ஏற்காது
வெண்பா எந்த கனிச்சீரையும் ஏற்காது
வெண்பா போல் வெண்கலிப்பாவும் ஈற்றடி மூன்று சீர்களால் ஆனது
ஆனால் வெண்பாவின் ஈற்றுச் சீர் ஒரே அசையில்தான் அமையவேண்டும்
அதனால்தான் இதற்கு வெண்கலிப்பா என்ற பெயர் வந்திருக்கக் கூடும்