நிஜமும் நிழலும்

வாழ்க்கையென்னும்
கால சக்கரத்தில்
ஒன்றோடு ஒன்று
இணைந்து இருப்பது
தவிர்க்க இயலாது

இதன் அர்த்தம்
ஆண் பெண் உறவுக்கு
மட்டும் பொருந்தும் என்று
எண்ண வேண்டாம்

மனிதனின் வாழ்வில்
இரவும் பகலும்
இணைந்தே இருக்கும்

பிறப்பும் இறப்பும்
உறவும் பிரிவும்
இணைந்தே இருக்கும்

பசியும் பிணியும்
சுகமும் துக்கமும்
ஏற்றமும் இறக்கமும்
இணைந்தே இருக்கும்

உண்மையும் பொய்யும்
இணைந்தே இருக்கும்

கடலும் அலையும்
நகமும் சதையும்
காயும் கனியும்
இணைந்தே இருக்கும்

இது போல்
நிஜமும் நிழலும்
ஏராளம்....ஏராளம்
நிஜத்தையும் நிழலையும்
காலம் நினைத்தால்
மட்டுமே
மனிதனோடு சேர்க்கவும்
பிரிக்கவும் இயலும்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Jul-22, 6:55 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nijamum nilalum
பார்வை : 377

மேலே