பூமாலை
பூவோடு சேர்ந்த நார்
மணம் பெறும் என்பார்கள்
பூக்கள் தனி தனியாக
இருந்தால் அதனை
"உதிரிப்பூக்கள்" என்பார்கள்
நாரில்லாமல்
"பூக்கள்"
மாலையாக முடியாது
என்றுமே
ஒன்றுடன் ஒன்று இணைந்து
இருந்தால் தான் மதிப்பு...!!
மனிதனின் வாழ்க்கையும்
பூமாலை போல்தான்
நீயா...?? நானா...??
என்பதல்ல வாழ்க்கை
நீயும் நானும் என்பதே
சிறப்பான வாழ்க்கை..!!
"கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை"
என்பது உண்மையே....!!
--கோவை சுபா