உன்னை நினைக்கவும் முடியவில்லை 555

***உன்னை நினைக்கவும் முடியவில்லை 555 ***
உயிரானவளே...
தினம் தினம் நான் உன்னை
நினைத்தே வாழ்கிறேன்...
தினம் தினம் என்னை வதைத்து
விலகியே செல்கிறாய்...
என்னை
நேசித்த நெஞ்சமே...
என்னிடம் பேச உனக்கு
வார்த்தைகள் பஞ்சமோ...
என் காதல் நோய் தீர்க்க
உன் வார்த்தைகளே அமிர்தம்...
உன் வார்த்தைகளை
எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்...
அன்று இரவெல்லாம்
பேசியவள்தான்...
இன்று இரண்டு நிமிடம்
கூட பேசுவதில்லை...
உன்னை வெறுக்கவும்
முடியவில்லை...
உன்னை நினைக்கவும்
முடியவில்லை...
உன் வாய்மொழியால்
என் இதயம் இனித்தது...
உன் மௌன மொழியால்
இன்று கன்னங்கள் நனைகிறது...
கதிரவன் மேற்கில்
உதிக்க போவதில்லை...
நானும் உன்னை என்றும்
வெறுக்க போவதுமில்லை...
என்
ஜீவன் வாழும் வரை.....
***முதல்பூ.பெ.மணி.....***