தேனசா

என்னடி அக்கா தங்கச்சி இரண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?

எல்லாம் ஒரு பேருக்குத் தான்.‌


பேருக்கா?

என்ன?

பாட்டி என் பொண்ணுக்கு 'மானசா'னு பேரு வைக்க முடிவு பண்ணி வச்சிருந்தேன். இதோ நிக்கறாளே என் தங்காச்சி, எஞ் சித்தப்பா பொண்ணு தங்கேஸ்வரியும் அவ பொண்ணுக்கு 'மானசா'னு பேரு வைக்கப் வைக்கப் போறாளாம்.


எதுக்குடி இரண்டு பேரும் ஒரு பேருக்கு சண்டை போட்டுக்கறீங்க? அக்கா அவ பொண்ணுக்கு 'மானசா'னு பேரு வச்சா தங்கச்சி தங்கேஸ்வரி அவ பொண்ணுக்கு 'தேனசா' னு வையுடி. 'தேனசா'வும் இந்திப் பேருனு சொன்னாப் போதும்டி உலகத் தமிழர்கள் எல்லோரும் "'தேனசா' சுவீட்டு நேம்"னு சொல்லுவாங்கடி. இதுக்குப் போயி சண்டை போட்டுக்கிறீங்க. போங்கடி பொழப்புக் கெட்ட பேத்திங்களா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Manasa = conceived in the mind, a lake in the Himalayas.

எழுதியவர் : மலர் (14-Jul-22, 9:44 pm)
பார்வை : 78

மேலே