அழகே உன் பெயர்

அழகே உன்
கையெழுத்தைப் போலவே
நீயும் அழகு!
அழகி உன் பெயரைச்
சொல்வாயா? செப்புவாயா?
உன் செவ்வாய் திறந்து.
நல்ல கையெழுத்துத் தான்
என் பெயர்
இந்திப் பெயரே அதுவும்!
வடக்கே பல பெண்களும்
இங்கும் பல பெண்களும்
இப்பெயரின் சொந்தக்காரிகள்.
கண்டு பிடியுங்கள் அன்பரே
செவ்வாய் என்றெனைப் புகழ்ந்தவரே
நாளெல்லாம் தேடினாலும்
தோல்வியே உமக்கு
நானே சொல்லாமல்
நீர் அறிய முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sulekha= Good handwriting