உன்னை நிழலாக நான் தொடர்கிறேன் 555

***உன்னை நிழலாக நான் தொடர்கிறேன் 555 ***
ப்ரியமானவளே...
உன்னுடன்
பிறந்தவர்கள் இருக்கலாம்...
நானோ உன்னுடன்
வாழ பிறந்தவன்...
உறக்கத்தில் வரும்
கனவுகள் மறந்துவிடலாம்...
நினைவாக பதிந்து இருப்பது
எப்படி மறக்க முடியும்...
நிழலாக என்னை ஏன்
தொடர்கிறாய் என்கிறாய்...
நிழலாகத்தான்
நான் தொடர்கிறேன்...
நீயோ இரவில் கனவாக
வந்து விரட்டுகிறாய்...
உன் மூச்சுக்காற்றின் தொடுதலில்
காதலை உணர்கிறேன்...
என் மனம் அறிந்தும் என்னை
இன்னும் ஏங்க வைப்பது ஏனோ...
எல்லோரிடமும்
அன்பாகத்தான் பேசுகிறேன்...
உன்னிடம் மட்டும்தான் என்னால்
உணர்வோடு பேச முடியும்...
வார்த்தையின் வர்ணிப்புகளில்
காதல் வாழ்வதில்லை...
வாழ்க்கையின் புரிதலில்தான்
காதல் வாழ்கிறது...
நீயும் நானும் சேர்ந்து
வாழ்வோம் வா என்னுடன்.....
***முதல்பூ.பெ.மணி.....***