கவின் ஓர் கவிதை சுரங்கம்
கவின் சாரலன் அவர்களே
எழுத்துத் தளத்தில் கால்பதித்து
பதினோரு ஆண்டுகள்
நிறைவு செய்துயுள்ளீர்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ..!!
இந்த நன்னாளில்
எனது கவிதையை பாராட்டி
"பாமாலை" கொண்டு
எனக்கு பொன்னாடைப் போர்த்தி
மகிழ்ச்சி வெள்ளத்தில்
என்னை திக்குமுக்காட செய்து
கௌரவப் படுத்தியுள்ளீர் ...
உண்மையில் கவின் அவர்களே
உமக்கு பெரிய மனசுதான் ...!!
உங்களது சிந்தனைத் தளத்தில்
இருந்து வெளிப்பட்டுள்ள கவிதைகள்
எண்ணிக்கையில் 6000 அவையனைத்தும் தமிழ் அன்னைக்கு
தாங்கள் சூட்டியுள்ள "பாமாலைகள்"
தங்களின் கவிதைகள் அனைத்தும்
புதிதாக கவிதை எழுத
முயற்சி செய்வோர்க்கு
ஓர் பயிற்சி பட்டறை என்றால்
அது மிகையாகாது ...!!
இன்னும் ...இன்னும் ..பல ஆண்டுகள்
தங்களின் தமிழ் தொண்டு சிறந்திட
எல்லாம் வல்ல இறைவனை வணங்கி
"வாழ்க நலமுடன்" என்று
என் சார்பிலும் ..எழுத்துத் தளத்தின்
நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்...!!
--கோவை சுபா