கலைவாணி பிறந்தநாள் வாழ்த்துக்கவி

சாரதி முதியோர் இல்லம்
G. கலைவாணி கணேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சரோஜாவின் வயிற்றில் பூத்த ரோஜா
நடராஜா உன்னை ஈன்ற ராஜா
கணேசன் உன் மனதை வென்ற ராஜா

கிளிகளுக்கு விருந்தென்றால் வேண்டும் கோவை
பல வலிகளுக்கு மருந்து வேண்டுமென்றால் போக வேண்டும் கோவை
நீ முதல்வரிடம் அன்னை தெரசா விருது பெற்ற பாவை
ஏழை மக்கள் முன்னேற வேண்டும் என்பதே உன் பார்வை
பெண்கள் தலையில் சூடுவது பூவை நீ சூடுவதோ சேவை


கலைவாணி
உன்னிடம் தான் சிவப்பை கடன் வாங்கியது மருதாணி
நீ ஏழை மக்களுக்கு உதவ பிறந்த மகாராணி
கேட்டவருக்கு எல்லாம் அள்ளிக் கொடுப்பது உன் பாணி
உன் பேச்சிலிருந்து தான் இனிப்பை தயார் செய்கிறது தேனி
உன் உதவும் மனமோ பரந்த காணி
முதியோர்களை உன்னை பெற்றோரைப் போல் கண்ணும் கருத்துமாய் காக்கின்றாய் நீ பேணி


சமூக சேவையில் சிறந்தவள் நீ துன்புறுவோரை காக்க அனைத்தையும் துறந்தவள் நீ

உனக்கு இன்று பிறந்தநாள் உலகிற்கு அது சிறந்த நாள்

அனைவரும் யானையில்
தாலாட்டு பெற நீ மட்டும் கலைவாணியின் வீணையிலல்லவா தாலாட்டு பெற்றாய்

அனைவருக்கும் கலையை கொடுத்த தமிழ்தாய் உனக்கு மட்டும்தான் தன் தலையை கொடுத்தாள்

நீ விண்ணில் இருந்து கலைவாணியின்
கைநழுவிய வீணை
ஒரு நாள் உன் புகழ் எட்டும் வானை

அது ஒரு மழைக்காலம்
அனைவரும் தன் மோக குழந்தைகளுக்கு அந்த நிலவைக் காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருக்க

அந்த நிலவு மட்டும்
தன் மேகக் குழந்தைகளுக்கு
உன் போல் ஒரு அன்னையைக் காட்டி
நீரூட்டிக் கொண்டிருந்தது

சிலர் கீழே சிந்திக் கிடந்த பன்னீரை துடைத்துக் கொண்டிருந்தார்கள்
சிலர் தன் வீட்டில் சிந்திக் கிடக்கும் தண்ணீரைத் துடைத்துக் கொண்டிருநதார்கள்
நீ மட்டும் ஏழை எளிய மக்களின் கண்களில் சிந்திக் கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாய்


நீ தலையில் சூடும் பூ அன்பு
உன்னைத் தாக்க வந்தாலும் உன் கழுத்தில் மாலை ஆகிறது அம்பு
அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது உன் மேன்மைப் பண்பு

உன் சிரிப்பு அது சிறப்பு
உன் பிறப்பு கண்டு
பொறாமை கொள்கிறது
பிற பூ

நீ திறமைக்கு எடுத்துக்காட்டு
மேலும் உன் அறிவினை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டு

நீ பச்சை புடவை அணிந்தால்
நீதான் மதுரை மீனாட்சி
நீ போகாத புதுவை
பகுதிகள் வீண் ஆச்சி

உன் சேவை
புதுவை மண்ணிற்கு தேவை

நீ நூறாண்டும்
ஊராண்டும் இப்பாராண்டும்
பல்லாண்டும்
தமிழ்ச் சொல்லாண்டும்
வாழ அன்போடு வாழ்த்துகிறோம்

எழுதியவர் : புதுவைக் குமார் (16-Jul-22, 6:31 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 33

மேலே