477 பொதுமகளுக்கு ஆண்பஞ்சம் புகல்வது வீணே – கணிகையரியல்பு 4

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா

ஆவியனை யாளையொரு பொழுதுபிரிந் தவளில்லம்
..அணுகுங் காலை
மேவுபாங்கி யைக்கண்டாண் துணையின்றி வருந்தினளோ
..மின்னா ளென்றேன்
நாவிதனுக் குண்டோகாண் மயிர்ப்பஞ்ச மலப்பஞ்சம்
..நாய்க்கு முண்டோ
தேவிதனக் குண்டோஆண் பஞ்சமென்றாள் அதன்பொருளைத்
..தெரிகி லேனே. 4

– கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

உயிர் ஒத்த பொதுமகளை ஒருபொழுது பிரிந்து அவள் வீடு சென்றேன். தோழியைக் கண்டேன். உன்தலைவி, ஆண் துணை (யான்) யில்லாமல் வருந்தினாளோ? என்றேன்.

அவள் `மயிர் வினைஞனுக்கு மயிர்ப்பஞ்சமும், நாய்க்கு மலப்பஞ்சமும் உண்டோ? அதுபோல் என் தலைவிக்கு ஆண் பஞ்சமும் உண்டோ? என்றாள். அதன் உள்ளுறைப் பொருள் ஒன்றும் விளங்கவில்லை.

பஞ்சம்-பொருள் கிடையாமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jul-22, 8:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே