கன்னக் குழிவினில் காதலின் மென்சூழல்
புன்னகையில் பூக்கும் புதிய ரோஜா
உன்புன்னகை யில்விரியும் மல்லிகைத் தோட்டம்
கன்னத்தின் குழிவினில் காதல் சுழலும்
மின்னல் விழிகள் கார்முகில் கூந்தல்
----கலிவிருத்தம்
புன்னகையில் பூக்கும் புதிதாய் மலர்ரோஜா
உன்புன் னகையில் விரியும்வெண் மல்லிகை
கன்னக் குழிவினில் காதலின் மென்சூழல்
மின்னல் விழிமுகில்கூந் தல்
---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
விருத்தம் வெண்பா வடிவம் பெறும் போது இன்னும் மெருகு
பெறுவதை யாப்பார்வலர்கள் காணலாம்
முதலடியிலும் மூன்றாம் அடியிலும் மூன்று
சீர்களில் மோனை அழகு செய்வதையும் பார்க்கவும்
(பு பூ பு --க கு கா ) இது கூழை மோனை
புன்னகையில் பூத்திடும் புத்தம் புதியரோஜா
உன்புன் னகையில் விரியும்வெண் மல்லிகை
கன்னக் குழிவினில் காதல் கவின்சூழல்
மின்னல் விழிமுகில்கூந் தல்
-முதலையையும் மூன்றாம் அடியையும் இன்னும் சற்று
மாற்றிஇருக்கிறேன்
இப்போது இரண்டு அடியிலும் நான்கு சீரிலும் மோனை
அழகு தருகிறது
{பு பூ பு பு ---க கு கா க ) இது முற்று மோனை எனப்படும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
