பெண் முன்னேற்றம்

பெண்ணே !
தடை கொண்டுன்னை
கிடையாக்க நினைத்தால்
மடைதிறந்த வெள்ளமென
மறுகரை சேர்ந்திடு...

இதுதான் விதியென்று
இயக்கத்தை நிறுத்திட்டால்
இறந்துவிட்டாயென்று
இறக்கிடுவர் மண்ணுக்குள்...

வீழ்ந்தாலும் மண்ணில்
விதையென வீழ்
விருட்சமாய் எழுவதற்கே !

எழுதியவர் : பர்வீன் (19-Jul-22, 3:34 pm)
பார்வை : 2153

மேலே