மின்னல் விழிகளில் மீன்களை யேந்தினாய் - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3 சீர்களில் மோனை)
மின்னல் விழிகளில் மீன்களை யேந்தினாய் கண்ணே!
கன்னக் குழிவினில் காதலைக் கவிதையாய் எழுத
உன்னைப் பார்த்ததும் உன்நினை வுதன்னிலே மூழ்கி
என்னை உன்னிலே இருத்தியே முற்றிலுந் தொலைத்தேன்!
- வ.க.கன்னியப்பன்

