கண்டுபாரங்கி - சிறுதேக்கு - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா)

கண்டுபா ரங்கியெனுஞ் சிறுதேக் குண்டேல்
கால்எங்கே பித்தமெங்கே கபந்தான் எங்கே
தொண்டுதொட்டுத் தொடர்சுவாச காசம் எங்கே
சுரம்எங்கே வெறியெங்கே தொணிநோ யெங்கே
மிண்டுபுரி பீநசநீர்க் கோவை யெங்கே
வெளிநீறாண் ணீரெங்கே விரற்கா லெங்கே
அண்டுபடாச் சீதசுரங் கடுப்பு மெங்கே
யழலையக நோயெங்கே யறைகு வீரே!

- பதார்த்த குண சிந்தாமணி

இக்காய் திரிதோடம், பித்தம், கபம், சுவாசகாசம், சுரம், நாசி நோய், முன்னீர்கோவை, பின்னீர்க் கோவை, உண்ணீர், குளிர்சுரம், கடுப்பு, உடல்வலி, உட்காந்தல், மனச்சங்கடம் இவற்றைப் போக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-22, 12:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே