சிற்றரத்தை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

வாந்திபித் தங்கரப்பான் வாதஞ்சி ரோரோகஞ்
சேர்ந்தகப முத்தோஷஞ் சீதமொடு - நேர்ந்தசுரம்
மற்றரத்தைக் காட்டி வருமிரும லுந்தீருஞ்
சிற்றரத்தை வன்மருந்தால் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் வாந்தி, பித்தம், கரப்பான், வாதம் , தலை நோய், கபம், முத்தோடம், சீதம், சுரம், இருமல் இவை போகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-22, 12:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே