விமர்சனம்

பசியில் சுருங்கினும்

விழியிமை கெஞ்சினும்
மனதிலெழும் கருத்தை
வார்த்தை யுருகொடுத்து
அலங்கரித்து மகிழ்பவன்
கவிஞன்...!

தங்கருத்தை கருவாக்கி
பிரசவித்த கவிதைக்கு
தரப்படும் பாராட்டுக்காக
ஏங்கும் தாயுமானவன்
கவிஞன்...!

ஒருகுழந்தை யைப்பற்றிய
விமர்சன மெவ்வாறு
தாயை மகிழ்விக்குமோ,
ஒரு கவிஞனின்
கவிதையு மவ்வாறே...!

தன்படைப்பின் விமர்சனத்தின்
நிறைக்ககம் மகிழ்ந்தாயினும்
அகம் சிரமேற்றாமல்தன்
படைப்பை மெருகேற்றுவான்,
குறையையும் சிரமேற்கொண்டு
களைந்துதன் தரமுயர்த்துவான்...!

நல்மரம் வெளியேற்றும்
காற்றெப்படி மனிதனின்
உயிர்க்காக்கும் சக்தியாக
மாற்றப் படுகின்றதோ
அவையே, விமர்சனம்
கவிஞனின் படைப்பை
காக்குமுயிர் மூச்சாகும்...!

விமர் சனத்திற்காக
காத்திருக்கும் கவிதாயினி,
கவிதாயினி தானே...?

எழுதியவர் : கவி பாரதீ (27-Jul-22, 10:59 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 121

மேலே