தேடிக்கொண்டே இருக்கிறேன்

எதையோ தேடிக் கொண்டிருக்கிறேன்...
எதைத்தான் என்று புரியவில்லை
எதிலும் பற்றில்லை
எல்லாவற்றையும்
பற்றிக்கொண்டு மனதுதான்
தொங்கிக்கொண்டிருக்கிறது.
எல்லாம் பிடித்தது போலிருக்கிறது
எதுவும் பிடிக்காமல் போய்விடுகிறது
எல்லாம் புரிந்தது போலிருக்கிறது
ஒன்றும் புரிபடாமல் போய்விடுகிறது.
எல்லாம் கிடைத்தது போலிருக்கிறது
கையில் கிடைத்ததும்
ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.
ஒரே குழப்பம்...
ஒரே மயக்கம்....
குழப்பம் இருந்தால்தானே
தெளிவு பிறக்கும்...
மயக்கம் இருந்தால்தானே
உறக்கம் விடியும்.
எல்லாம் சரிதான்.
இன்னும்
எத்தனை நாட்களுக்குத்தான்
இந்த குழப்பம்?.
இன்னும்
எத்தனை நாட்களுக்குத்தான்
இந்த மயக்கம்?
இன்னமும்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்.
தேடிக்கொண்டே இருக்கிறேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Jul-22, 8:30 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : thedikonde irukiren
பார்வை : 125

மேலே