அவசர கோலங்கள்

"ஓய்...பொண்டாட்டி..
நான் யாரடி உனக்கு?"
"ம்ம்...புருஷன்..
ஏன் ஒரு தடவ சொன்னா
காதுல உழாதா?"
"போனை எடுக்க இத்தன நேரமா?"
இன்றைய இளசுகளின்
காதலின்
உரிமை குரல்கள்.
என்ன உரிமை? என்ன கோபம்?
வாழ்க்கை...
சொப்பு வைத்து விளையாடும்
சிறு பிள்ளை விளையாட்டாய்
போய்விட்டது.
எல்லாவற்றிலும் வேகம்
எதிலும் அவசரம்
பார்ப்பதில் அவசரம்...
தேர்ந்தெடுப்பதில் அவசரம்...
காதலிப்பதில் அவசரம்...
'பிரேக்கப்' ஆவதிலும் அவசரம்...
ஓடிப்போவதில் அவசரம்..
கல்யாணம் செய்வதில் அவசரம்...
விவாகரத்திலும் அவசரம்...
ஏன்
உயிரை மாய்த்துக்கொள்வதிலும் அவசரம்..
இன்றைய காதல்
உள்ளப்பூர்வமாய் இல்லாமல்
உணர்வுபூர்வமாய்...உடற்பூர்வமாய்...
அவசரத்தில் அள்ளித்தெளித்த
கோலமாய் அலங்கோலமாய்
இருக்கிறது. என்ன செய்ய?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-Aug-22, 7:29 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : avasara kolangal
பார்வை : 78

மேலே