லிமரைக்கூ

************************************
நினைவுகளை அசைபோடும் முதுமை
விட்டுச் சென்ற​ துணையின் ஞாபகங்கள்..
தனிமைதான் எவ்வளவு கொடுமை?

************************************

காலம் சென்ற​ ஞானங்கள்
எரிபொருள் தீரும் ஊர்தியின் இலக்கோ..
இன்னும் பல​ தூரங்கள்!

************************************

கறவை நிறுத்திய​ பசுவை
அடிமாட்டு பேரம் பேசிடும் வாரிசுகள்..
செய்தித்தாளில் முகம்மறைக்குது முதுமை

************************************
 

எழுதியவர் : சு.அப்துல் கரீம் (4-Aug-22, 8:49 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 267

சிறந்த கவிதைகள்

மேலே